Thursday, October 4, 2007

அனுபவத்தின் வெளிப்பாடுகள்

 • உன்னுடைய எதிர்பார்ப்பு தோல்வியடையும்போது அதன் அல்லது அவர் மீது உன்னையறியாமலே வரும் வெறுப்பை தவிர்க்க முயற்சி செய்.
 • மற்றவரின் சின்னச்சின்னக் குறைபாடுகளை சுட்டிக்காட்டும்போது வரும் மனஸ்தாபங்களை பொருட்படுத்தாதே!!
 • உன்னுடைய சிறிய தவறுகளை மற்றொருவர் குறிப்பிடும்போது மனமுவந்து ஏற்றுக்கொள்.
 • நீ இன்னொருவரிடம் உரிமை எடுத்துக்கொள்ளுமுன் அவர் உனக்கு கொடுத்திருக்கும் வரைமுறையை மனதில் வைத்துக்கொள்.
 • உலகம் உன்னை கவனமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதை ஒருபோதும் மறவாதே.
 • சிறப்பானவற்றை செய்யும்போது பாராட்டாத உலகம் தவறான ஒன்றுக்கு தண்டிக்கக் காத்திருக்கும்.
 • உன்னைச்சுற்றியுள்ளவர்கள் எப்போதும் உன் பரம எதிரிகளென்ற கவனம் வை ஆனால் நீ நண்பனாகவே இரு.
 • நல்லது செய்ய வேண்டாம் நல்லவற்றையே நினை.
 • நீ செய்வது நல்லதோ கெட்டதோ, பலமுறை யோசித்துச் செய்.
 • நீ எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உன் எதிர்கால மாளிகையின் ஒர் செங்கல்.
 • மற்றவர் வேதனைப்படும்போது அவர்முன் நீ சந்தோசமாக இருக்காதே
 • காயங்களுக்கு மருந்து வேண்டாம் கனிவான பார்வைபோதும்
 • எப்போது மற்றவரின் துன்பத்தை உன்னுடையதாய் நினைக்க ஆரம்பிக்கிறாயோ அப்போதுதான் நீ மனிதனாகிறாய்.
 • ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அமைதியாய் இரு
 • கண்ணீரைத் துடைக்க வேண்டாம் கனிவான வார்த்தை போதும்
 • உன்னைச்சுற்றி எதிர்ப்பு வலுப்பெறுகிறதென்றால் நீ தலைவனாகத் தகுதியானவன்
 • எதையும் பாசத்தோடு பார் ஒவ்வொன்றும் உன்னிடம் பேசத்தொடங்கும்
 • நீ முதலில் உன்னை மதிக்கக் கற்றுக்கொள்
 • உன்னை முன்னால் நடக்கவிட்டு நீ பின்னாலிருந்து மதிப்பீடு செய்.
 • உன்னை ஒரு போதும் நீ தவறாக மதிப்பீடு செய்யாதே
 • குறைந்தபட்சம் உன்னைப்பார்ப்பவரிடம் சிரித்துவை, கடன் கேட்க மாட்டார்கள்.
 • கடன் கொடு கேட்காதே! வாங்கியதைக் கேட்காமல் கொடுத்துவிடு
 • மற்றவரின் மனைவியைத்தொடும்போதும் தூக்கத்தைக்கெடுக்கும்போதும் ஏற்படும் விளைவு ஒன்றுதான்
 • உலகத்தின் அமைதியை ரசிக்கக் கற்றுக்கொள் அது உன்னை ரசிக்கும்
 • நல்லவனாய் இருப்பதைவிட தேசபக்தனாய் இரு
 • உன் கண்முன் ஒரு தவறு நடந்தால் தயங்காமல் தட்டிக்கேள்
 • கஷ்டங்கள் பிரச்னைகள் மூலம்தான் கடவுள் உனக்கு வாய்ப்புக்களை வழங்குவார்
 • நேற்று நடந்ததை உன் கையிலும் இன்று நடப்பதை உன் கண்ணெதிரிலும் வைத்துக்கொண்டு நாளை நடப்பதை நீ நிர்ணயிக்க முடியும்.
 • எல்லாக் கடனிலும் பெரியது உன் காதுகளைக் கொடுப்பது
 • மருந்து போடவேண்டாம் குறைந்தபட்சம் மனதைப் புண்படுத்தாமலிரு.
 • உலகத்தில் ஒருவருக்குமே பிடிக்காதது மற்றவரின் புத்திமதி
 • தேவையற்ற அறிவுரை பகையை, வெறுப்பை வளர்க்கும்
 • உன் கடந்த காலங்களை கர்வத்தோடு பார் எதிர்காலம் எளிதாகத் தோன்றும்
 • உன் உணர்வுகளை மதிக்காதவனை எப்போதும் தூரத்தில் வை
 • வரிசையில் நிற்கும் போது வாய்ப்பு வந்தால் இடையில் புகாதே!
 • வரிசையில் நிற்கும்போது உன் பின்னால் நிற்பவரை ஒரு முறையாவது முன்னால் போக அனுமதி
 • தனிமையில் நல்லவனாயிரு பொதுவில் புகழப்படுவாய்
 • ஆசைகளையும் தேவைகளையும் சுருக்கிக்கொள்ளாதே! வருமானத்தைப் பெருக்கிக்கொள்
 • கூடுமானவரை ரத்த சம்பந்தமுள்ளவளை மணந்துகொள்
 • தோல்வியடையும்போது தோல்வியை மறந்துவிடு தோல்வியினால் பெறும் பாடத்தை மறந்துவிடாதே
 • மனைவியின் தகாத உறவும் மரணப்படுக்கையும் ஒன்றுதான்

1 comment:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in